இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங்), மூத்த தோழர் சலீம் அவர்கள் காலமானார்.
01-08-2025 Face Book
தோழர் சலீம் அவர்கள் யாழ்ப்பாணம் முஸ்லீம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்.
முஸ்லீம்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடபகுதியிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டபின் நீர்கொழும்பு, கொழும்பு - தெமட்டக்கொட ஆகிய இடங்களில் வசித்த தோழர் சலீம் வியாழன் மாலை (31 - 07 - 2025) அன்று காலமானார்.
இன்று காலை (01 - 08 - 2025) நீர்கொழும்பில் அடக்கம் செய்யப்பட்டார்.
தோழர் சலீம் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஓ) மூத்த உறுப்பினரும், முன்னணிச் செயற்பாட்டாளரும் ஆவர்.
கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் என். சண்முகதாசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அறுபதுகளில் சண் கட்சியின் சாதிய அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களில் முன்னின்று போராடியவர்.
முஸ்லீம் வட்டாரத்தில் தோழர் எம். ஏ. சி. இக்பாலுடன் இணைந்து பலமான கட்சிக் கிளையை உருவாக்கிச் செயற்பட்டவர்.
கட்சியின் போராட்டங்கள் யாவற்றிலும் உறுதுணையாகவிருந்து செயற்பட்டவர்.
1960 - 1970 காலப்பகுதியில் `தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப்` போராட்ட நடவடிக்கைகள் யாவற்றுக்கும் பங்களிப்பு நல்கியவர்.
எழுத்தாளர் தோழர் கே. டானியலின் நம்பிக்கைக்குரிய போராளியாக விளங்கியவர்.
உடல் நலம் குன்றிய நிலையிலிருந்த அவரை முன்னர் நீர்கொழும்பிலும், கடந்த வருடம் தெமட்டகொடவிலும் தோழர் இக்பாலுடன் சென்று பார்த்துப்பேசி வந்தேன்.
என்னுடன் பாசத்துடன் பழகிய அன்புத் தோழரின் மறைவு மிகுந்த கவலை தருகிறது..
தோழருக்கு எமது அஞ்சலி
செவ்வணக்கம்.
தோழர் தம்பிராஜா இளங்கோவன்- பாரீஸ்- Face Book ENB
