நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

கேணியில் விழுந்த மாணவிகள் இருவர் உயிரிழப்பு.


முல்லைத்தீவில் கோவில் கேணியில் தவறி விழுந்த மாணவிகள் இருவர் உயிரிழப்பு.

01-06-2025 ஊடக சமூகம்.

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் ஆவர். 

மாணவிகள் நீரில் மூழ்கியவண்ணம் உதவிக்கு அலறிய வேளை, அக்குரல் கேட்கும் தொலைவில் ஆலயச் சூழலில் எவரையும் காணவில்லை.மேலும் கேணிக்கு பாதுகாப்பாக எந்த வாசல் தடுப்புகளும் கமெராவில் காணப்படவில்லை. காலம் தாமதித்து பொதுமக்கள் கூடி கேணியில் இருந்து எடுத்த போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அவசர அம்பியுலன்ஸ் சேவை பயன்பட்டதான பதிவும் CCTV இல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒத்தவை: