நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

ஜனாதிபதி அலுவலகத்தில் பொசொன் கலந்துரையாடல்


சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளில் நடைபெறும் பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

தினகரன் மே 8, 2025

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்றது.

குறித்த நிகழ்விற்காக விகாரைகளுக்கு வருகைத்தரும் பக்தர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாராதிபதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

குறிப்பாக கதிர்காமத்திலிருந்து சிதுல்பவ்வ வரையிலான வீதியை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிதுபவ்வ விகாராதிபதி லேல்வல சமித தேரர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளில் நடைபெறவிருக்கும் பொசொன் தான நிகழ்ச்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

திஸ்ஸமஹாராம விகாராதிபதி கலாநிதி தேவாலகம தம்மசேன தேரர், ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் இந்திரஜித் சில்வா உள்ளிட்டவர்களும் அரச நிறுவனங்களின் பிரதானிகள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

_________________

குறிப்பு:

இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசில் பெளத்த மதம் அரச மதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒத்தவை: